இதயங்கள் பேசலாம் நம் இணையதளத்தில் இனி ...
அமிழ்தினும் இனிய கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்.
கலாச்சாரம், பண்பாட்டிற்கும், கடின உழைப்பிற்கும், உண்மைக்கும், உயர்வுக்கும் பெயர் பெற்ற நம் கொங்கு சமுதாயம் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டு, கரடு முரடன காடுகளை பொன்விளையும் பூமியாக மாற்றிய பெருமை நம் கொங்கு இனத்தையே சாரும். கால சூழ்நிலையின் காரணமாகவும் பல்வேறு பிரச்சனைகளை முன்னிட்டும் விவசாய தொழில் நலிவடைந்து கொண்டிருந்த காரணத்தினாலும் மற்ற தொழில்களில் ஈடுபட்டு பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையிலும் நமது கடின உழைப்பால் பல்வேறு தொழில்களை திறன்பட செய்து வருகிறோம். அனால் நமது சமுதாயம் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பாக காவல் துறை மற்றும் வருவாய் துறைகளில் நம்முடைய பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளத்தால், நமது சமுதாயத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளை குறி வைத்து காதல் திருமணம் என்ற போர்வையில் நடக்கும் நாடகக் காதலில் இருந்து பாதுகாத்தல், நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்தல், கல்வி, வேலைவைய்ப்புகளில் நமது இளைஞர்களை தயார் படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குதல் போன்ற முக்கிய குறிக்கோள்களாக கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கு வேளாளர் சமுதாய மக்களால் துவங்கப்பட்டது தான் "கொங்கு நண்பர்கள் சங்கம் - சேலம்." நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கும், நமது சமுதாய கலாச்சார பெருமையை குறிப்பாக குலதெய்வ வழிபாடு மற்றும் உறவு முறைகளை நமது குழந்தைகள் அறிந்து கொள்வதற்கும், கொங்கு சமுதாயத்தில் உள்ள உற்பிரிவினரும் உறுப்பினராக சேர்ந்து நமது கொங்கு சமுதாயத்தை பேணிகாத்திட அன்புடன் அழைக்கின்றோம். நமது சேலம் மாவட்ட கொங்கு சமுதாயம் சிறப்புடன் பல சேவைகளை செய்திட நம் கொங்கு இன மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். குடும்பங்களின் புகைப்படம், குலப்பிரிவு, திருமண நிலை, வேலை வாய்ப்பு, அனைத்து குலக்கோவில்களின் வரலாறு, அனைத்து கொங்கு இன மக்களின் குடும்ப விவரங்கள் அனைத்தையும் அறிந்துக்கொள்ள இயலும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துகொள்கிறோம். மேலும் தொழில்துறையில் சமீபகால தொழில் நுட்பங்கள், பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், கல்விப்பிரிவில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் அறிந்துகொள்ள நவீன செய்திகளை அளிக்க உள்ளோம்.
என்றென்றும் சமுதயப்பணியில்
கொங்கு நண்பர்கள் சங்கம் - சேலம்.